இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் மரணம்

அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் மரணம்

இஸ்ரேல் படைகள் தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷிரின் அபு அக்லா பாலஸ்தீன பத்திரிகையாளர். இவர் பல ஆண்டுகளாக அல் ஜசீரா பத்திரிகையில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இஸ்ரேல் இராணுவத்தால் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கொல்லப்பட்டபோது ஷிரின் பத்திரிக்கையாளர்களுக்கான தற்காப்பு ஆடையையே அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. ஷிரின் அபு அக்லாவின் மரணம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவுச் செய்துள்ளனர். ஆனால் இஸ்ரேல் இராணுவம் இதனை மறுத்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனர்களுக்கு இடையேயான மோதலில் பாலஸ்தீனர்களால் அவர் சுடப்பட்டிருக்கலாம் என்று என்றும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

Tamil News