ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணிக்க ஆண் உறவினர் துணை அவசியம்: தாலிபன்

398 Views

ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம்

ஆப்கன் பெண்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் பெண்கள் இனி தனியாகப் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தாலிபன் தெரிவித்துள்ளது. குறுகிய தூரப் பயணங்களைத் தவிர மற்ற பயணங்களின் போது, அவர்களுடன் நெருங்கிய ஆண் உறவினர் இருப்பது கட்டாயம் என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது.

தங்களுடன் நெருங்கிய ஆண் உறவினர்கள் இல்லாமல் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள விரும்பும் பெண்களுக்கு பயணத்திற்கான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட மாட்டாது என்று தாலிபன் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, தாலிபனின் நன்னடத்தை மற்றும் தீமை தடுப்பு அமைச்சகம், தேவையான வழிமுறையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, இந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாதிக் அகிஃப் முஹாஜிர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 72 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் பெண்களுக்கு, இனி தங்கள் ஆண் உறவினர்கள் யாரும் இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதை தவிர,  ஹிஜாப் அணியாமல் இருக்கும் பெண்களை தங்கள் வாகனங்களில் அமர அனுமதிக்கக்கூடாது என்று வாகன உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil News

Leave a Reply