ஆப்கன் நிலநடுக்கம்: 155 குழந்தைகள் உயிரிழப்பு

375 Views

155 குழந்தைகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த 22-ம்திகதி  காலை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்துக்கு 1,500க்கும் மேற்பட்டோர்   உயிரிழந்ததாகவும் 1,600 பேர் காயம் அடைந்ததாகவும் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாகவும் தலிபான் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்கனில் நிலநடுக்கத்துக்கு உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. பக்திகா மாகாணத்தில் நிலநடுக்கத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கயான் மாவட்டத்தில் அதிக குழந்தைகள் இறந்துள்ளன.

பக்திகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில் மேலும் 250 குழந்தைகள் காயம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகள் ஒருங்கிணைப்பு அமைப்பு  தெரிவித்துள்ளது.

Tamil News

Leave a Reply