இலங்கையின் நிதி முகாமைத்துவத்திற்கு அமெரிக்கா உதவி

அமெரிக்கா உதவி

இலங்கையில் அரச நிதி முகாமைத்துவத்திற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் கெல்லி கெய்டர்லிங் (Kelly Keiderling) பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குவதாக அமெரிக்க இராஜதந்திர குழு தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அமெரிக்காவின் ஆசியாவுக்கான திறைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert kaproth), மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tamil News