குழந்தைகளை விற்பனை செய்யும் ஆப்கான் மக்கள்

399 Views

குழந்தைகளை விற்பனை செய்யும் ஆப்கான் மக்கள்

குழந்தைகளை விற்பனை செய்யும் ஆப்கான் மக்கள்

பொருளதார நெருக்கடிகள் காரணமாக தமது உணவுத் தேவைக்குக் குழந்தைகளையும் பெண் சிறுமிகளையும் ஆப்கான் மக்கள் விற்பனை செய்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:

மேற்குலகத்தின் தடை காரணமாக ஆப்கானின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடையும் நிலையை எட்டியுள்ளது. அங்குள்ள மக்களை பட்டினி ஆழிப்பேரலை போல தாக்குகின்றது.

23 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்நோக்கியுள்ளனர். 95 விகிதமான மக்கள் குறைவான உணவையே உட்கொள்கின்றனர். பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களில் 100 விகிதமானவர்கள் பட்டினியை எதிர்நோக்குவதாக ஐ.நா செயலாளர் நாயகத்தின் உதவி சிறப்பு பிரதிநிதி கலாநிதி ரமிஸ் அலக்பரோவ் தெரிவித்துள்ளார்.

தலிபான்களின் வருகைக்கு பின்னர் ஊடகத்துறையில் பணியாற்றிய 60 விகிதமான பெண்கள் பணியை இழந்துள்ளனர்.

இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் 13,700 குழந்தைகளும், 26 தாய்மாரும் இறந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரொட்டி மட்டுமே உணவாக உள்ளது. சில சமயங்களில் மரக்கறிகள் கிடைக்கும். தேநீர் மட்டும் பருகுவோம். சீனி கிடைப்பது மிகவும் அரிது என அங்கு வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply