2025 ஆம் ஆண்டில் காணப்பட்ட 5.0 சதவீத இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 2026 இல் 4.0 சதவீதமாக வீழ்ச்சியடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதலானது, அபிவிருத்தியடைந்து வரும் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதார நிலைவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய ஆசிய அபிவிருத்தி வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2027 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது 4.2 சதவீதமாகச் சிறியளவில் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பணவீக்கமானது 2026 ஆம் ஆண்டில் -0.5 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக உயர்ந்து, பின்னர் 2027 இல் 4.0 சதவீதமாகத் குறைவடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தெரிவித்துள்ளது.



