அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையின் பெண் வைத்தியர் ஒருவர் இரவு உணவை உண்பதற்காக நேற்று முன்தினம் (10) தமது விடுதிக்கு சென்ற நிலையில் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளார்.
இந்தநிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில் சந்தேகநபரை கைது செய்வதற்காக 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன் 45 விசேட அதிரடி படையினரும் இந்த பணிகளில் ஈடுபடுப்பட்டனர்.
இந்தநிலையில் குறித்த சந்தேகநபர் கல்னேவ பகுதியில் உள்ள வனப் பகுதியில் ஒன்றில் வைத்து இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். 34 வயதான குறித்த சந்தேகநபர் ஏற்கனவே மற்றுமொரு கொள்ளை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் (10) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அன்றைய தினம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதிக்கு சென்ற முன்னாள் இராணுவ சிப்பாயான சந்தேகநபர், குறித்த பெண் வைத்தியரை வல்லுறவுக்குட்படுத்தி அவரது கையடக்க தொலைபேசி ஒன்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளார்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட வைத்தியரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட தொலைபேசி தரவுகளுக்கு அமைய, கல்னேவ பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, இந்த சம்பவத்துக்கு நீதிக்கோரி அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (13) காலை 8 மணிவரை அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இதனால் வைத்தியசாலைகளின் சேவைகள்பா திப்படைந்துள்ளன.