ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கும் காலிமுகத்திடல் போராட்ட கள செயற்பாட்டாளர்கள்

ஜெனிவா கூட்டத்தொடர் இன்று கூடும் நிலையில், காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளரான சட்டத்தரணி நுவன் போபகே மற்றும் ஷெஹான் மாலக்க ஆகியோர் இன்று ஜெனிவா மாநாட்டில் உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று செப்டெம்பர் 12ஆம் திகதி முதல் ஒக்டோபர் 7ஆம் திகதி வரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் காலிமுகத்திடல் போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு முன்னணி போராளிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதகலிகே உள்ளிட்டோரை கைது செய்து அரசாங்கம் போராட்டத்தை நசுக்க முற்படுவது தொடர்பில் இங்கு குரல் எழுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.