தமிழர் பிரதேசத்தில் கடவுள்களும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படும் நிலை

367 Views

கடவுள்களும் கடத்தப்பட்டு காணாமல்

யாழ்ப்பாணத்தில் கடவுள்களும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 4 பிள்ளையார் சிலைகள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளன. தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கெமுனு விகாரை பகுதியில் இருந்த பிள்ளையார் சிலை ஒன்று கடந்த சில நாட்களுக்கு கடத்தப்பட்டு காணமல் போயிருந்தது.

இந் நிலையில் நேற்று தெல்லிப்பளை மகாஜனா ஆலயத்தில் இரு பிள்ளையார் சிலைகள் காணமல் போயுள்ளன.

அதுமட்டுமல்லாது பலாலி காவல்துறை பகுதிக்குள் உட்பட்ட பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிலும் பிள்ளையார் சிலை காணாமல் போயுள்ளது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு முறையிட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்மிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply