மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட காணி அளவீட்டு பணிகள்

283 Views

மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்ட

யாழ். மாதகல் பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டு பணிகள் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

மாதகல் ஜே 150 கிராம சேவையாளர் பிரிவில் தனியார் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினர், அக்காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்றைய தினம் (17) முன்னெடுக்கப்படவிருந்தது. இந்த நடவடிக்கை மக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது.

காணிகளை அளவீடு செய்வதற்காக நிலஅளவை திணைக்கள உத்தியோகஸ்தர்கள் வருகை தந்த போது, காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து, காணி அளவீட்டுப் பணிக்கு வந்தவர்கள் திரும்பி சென்றுள்ளனர்.

Leave a Reply