134 Views
மியான்மர் உடனடியாக வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இரு நாட்டு பிரதமர்களும் வெளியிட்டுக்கும் கூட்டு அறிக்கையில்,
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நிலவி வரும் அரசியல் பிணக்கை உடைக்க தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) எடுதது வரும் முயற்சிக்கு எங்களது ஆரதவை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கடந்த ஆண்டு பெப்ரவரி முதலாம் நாள் மியான்மாரில் இராணு ஆட்சி கொண்டுவரப்பட்டது. இதில் தற்போது வரையில் 1600 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 இலட்சம் பேர் வரையில் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அத்தோடு பல்லாயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.