இலங்கைக்கு தொடர்ந்து எரிபொருளை விநியோகிக்க முடியாது: இந்திய நிறுவனமான IOC அறிவிப்பு

283 Views

எரிபொருளை விநியோகிக்க முடியாது

இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை விநியோகிக்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(IOC) இலங்கைக்கு அறிவித்துள்ளது.

இந்தியாவின் கடன் உதவியின் கீழ் தொடர்ந்து இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் எரிபொருளை கொள்வனவு செய்ய முன்னர் எதிர்பார்த்து இருந்ததாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி. ஆர்.ஒல்கா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு காரணமாக வேறு விநியோகஸ்தரிடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான விலை மனு கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மசகு எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்திய நிறுவனம் வழங்காததால், கூட்டுத்தாபனமே கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார்.

Leave a Reply