ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் புகைப்படம்

125868934 webb v hubble nc.png ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் புகைப்படம்

பேரண்டத்தின் குழந்தைப் பருவத்தைக் காட்டும் வகையில், இதுவரை இல்லாத தெளிவோடு, ஆழத்தோடு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா இந்த தொலை நோக்கியை கடந்த ஆண்டு டிசம்பர் 25ம் தேதி விண்ணில் ஏவியது.

‘விண்வெளியில் உள்ள புவியின் கண்’ என்று வருணிக்கப்படும் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியின் ஆயுள் முடிவை நெருங்கி வரும் நிலையில், ஜேம்ஸ் வெப் அதன் வாரிசாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், விண்வெளியில் ஜேம்ஸ் வெப் எடுத்த முதல் முழு வண்ணப் புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது.

ஒரு புகைப்படம்தானே. இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் என்று தோன்றுகிறதா?

விண்வெளியில் தொலைதூர உடுத் திரள்களை (நட்சத்திரக் கூட்டங்களை) படம் எடுப்பது என்பது கேமிராவை ஆன் செய்து, கிளிக் செய்வது போல சில விநாடி வேலை அல்ல. பேரண்டத்தின் தொலைதூரத்தைப் பார்ப்பதில் சிக்கல் என்னவென்றால், பேரண்டத்தின் தூசிப்படலம் ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் பார்க்க முடியாதபடி காட்சியை மறைத்துவிடும். எனவே எக்ஸ்ரே, அகச்சிவப்புக் கதிர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி அதிநவீன கருவிகளின் உதவியோடு தரவுகளைத் திரட்டி அவற்றைப் படமாக தொகுத்தே வழங்குவார்கள். இப்படி பேரண்டத்தை காட்சிப் படுத்தி இதுவரை எடுக்கப்பட்ட படங்களில் இதுவரை இல்லாத அளவு ஆழத்தோடும், தெளிவோடும் அமைந்திருப்பதுதான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்ட முதல் படத்தின் சிறப்பு என்கிறது நாசா.

நன்றி- பிபிசி தமிழ்