வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) 10 இலட்சம் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழாவின் போது விநாயகருக்கு மாம்பழங்கள் மற்றும் மாலை அணிவித்து, விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் விநாயகருக்கு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்ட போது கடும் போட்டிகளுக்கு மத்தியில் கணேசபுரம் பகுதியில் வசிக்கும் மோகன் குமார் குடும்பம் இறுதியாக 10 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தை கோரியுள்ளனர்.
இவ்வாறான நிலையில், குறித்த மாம்பழங்கள் மற்றும் மாலை ஆகியன 10 இலட்சம் ரூபாவிற்கு இறுதியாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.