இலங்கை: பாராளுமன்றத்தை சுற்றி இரவோடு இரவாக இரும்பு கம்பிகளால் தடுப்பு வேலி அமைப்பு

WhatsApp Image 2022 05 05 at 7.37.17 AM இலங்கை: பாராளுமன்றத்தை சுற்றி இரவோடு இரவாக இரும்பு கம்பிகளால் தடுப்பு வேலி அமைப்பு

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 27 ஆவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில், பாராளுமன்றத்தை சுற்றி  இரும்பு கம்பிகளை கொண்டு தடுப்பு வேலிகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர்.

கோட்டாபய தலைமையிலான அரசை கூண்டோடு பதவிவிலக வலியுறுத்தி தொடர்ந்தும் மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறனர். இருப்பினும் ஆட்சி-அதிகாரத்தை கைவிட்டு செல்ல ராஜபக்சக்கள் தொடர்ந்து மறுத்துவருகின்றனர்.

கோட்டாபய தலைமையிலான அரசை கூண்டோடு பதவிவிலக வலியுறுத்தி நாளை நாடு தழுவியதாக வேலை நிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கபட உள்ளது.

இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரும்பு கம்பிகளை கொண்ட தடுப்பு வேலியை இரவோடு இரவாக காவல்துறையினர் அமைத்துள்ளனர்.

இன்றைய தினம் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இவ்வாக்கெடுப்பின் மூலம் பாராளுமன்றில் யாருக்கு பெரும்பான்மை உள்ளதென்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.