சிறீலங்கா தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ்ற்குள் ஊடுருவல் – தாக்குதல் அச்சத்தில் மக்கள்

சிறீலங்கா மூஸ்லீம் தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதால் அங்கு தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஸ்ரெற்ஸ் ரைம்ஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவில் இருந்து இரண்டு தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் இற்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் அங்குள்ள தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து குண்டுகளைத் தயாரித்து தேவாலையங்கள் உட்பட இலகுவான இலக்குகளை தாக்கலாம்.

மனிலா அனைத்துலக விமான நிலையத்தின் தகவல்களின் படி மார்க் கெவின் சம்கூன் மற்றும் விக்ரோரியா சோபியா டொமிங்கோ ஆகியவர்களே நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனர்.

இவர்கள் தற்கொலைதாரிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். சிறீலங்கா தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த இவர்களில் சம்கூனின் தயார் டுபாயில் பணியாற்றி வருகின்றார்.

இந்த அமைப்பு சிறீலங்காவில் மேற்கொண்ட தாக்குதலில் 250 மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. டோமின்கோ குண்டு தயாரிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். அவர் பிலிப்பைன்ஸ் மற்றும் சிறிலங்கா கடவுச்சீட்டுக்களை வைத்துள்ளார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.