இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவில் அகதிகள் படும் இன்னல்கள்

அவுஸ்திரேலியா அகதிகள் மட்டுமல்ல இந்தோனேசியாவிலுள்ள 14ஆயிரம் அகதிகளும் சொல்லவொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, மனுஸ் மற்றும் நவுறு தீவுகளைப் போலவே அடிப்படைப் பிரச்சினைகளை இந்தோனேசியாவிலுள்ள அகதிகளும் அனுபவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அங்குள்ள பல அகதிகள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களில் சிலர் தற்கொலைக்கும் முயன்றுள்ளனர்.

தெற்கு ஜாவாவிலிருந்து கிறிஸ்மஸ் தீவிற்கான கடல் வழியை இராணுவ ரீதியாக தடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறினாலும் 2014இற்குப் பின்னர் இந்தோனேசியாவில் உள்ள அகதிகள் தொடர்பில் அவர்கள் அக்கறையுடன் நடந்து கொள்ளவில்லை.

குறிப்பாக ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் அகதிகளை மீளக் குடியமர்த்துவதில் பிரதமர் ஸ்கொட் மோரிசன் கடும் போக்குடையவராக செயற்படுவதாகவும் அவுஸ்திரேலிய இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டது.

இதேவேளை அவுஸ்திரேலியா நோக்கி சட்டவிரோதமாக படகுகள் மூலம் சென்ற பெருமளவு இலங்கையர்களும் இந்தோனேசிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.