ஆண்கள் அனுமதியின்றி பெண்கள் வெளிநாடு போகலாம் : சவுதி அரசு

சவுதி அரேபியாவில் ஆண்களின் அனுமதியின்றி பெண்கள் வௌிநாடு செல்ல, அரசு அனுமதி அளித்துள்ளது. சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பின்னர், பெண்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக தளர்த்தி  வருகிறார். கடந்த ஆண்டு ஜூனில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், விளையாட்டு மைதானங்களுக்கு செல்வதற்கும் அனுமதி வழங்கினார்.

எனினும், சவுதி பெண்கள் வெளிநாடு செல்வதற்கு கணவர், தந்தை அல்லது குடும்ப ஆண் உறுப்பினர்களின் அனுமதி பெற வேண்டும் என்பது அரசு விதியாகும். இது பிடிக்காத பல பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று, அடைக்கலம் கோரினர். அடைக்கலம் கோரினார். இது, சவுதி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், சவுதி அரசு  நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘சவுதியை சேர்ந்த 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்், கணவர் அல்லது தந்தையின் அனுமதியின்றி வெளிநாடு செல்லலாம். பெண்கள் தனியாக விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் வழங்கப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டு பெண்கள் வரவேற்றுள்ளனர்.