எழுவர் விடுதலை தொடர்பில் தமிழக அரசு நடவடிக்கை

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு மேற்படி நினைவூட்டல் கடிதம் அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில் தமிழக அரசு நினைவூட்டல் கடிதத்தை அனுப்ப முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ​ெராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 2012-ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் இந்த தண்டனையை அனுபவித்து வருவதாகவும், கருணை அடிப்படையிலும், மனிதாபிமானம் அடிப்படையிலும் தங்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்த போது, தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், ஆளுநர்தான் இன்னும் முடிவு எடுக்காமல் இருக்கிறார் எனவும் இது குறித்து விளக்கம் கேட்டு தெரிவிப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்றைய திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. முக்கூட்டியே விடுதலை செய்யக் கூறும் வழக்குகள் ஏற்கனவே ஜுலை 30-ம் திகதி பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த வழக்குடன் ​ராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும், இதற்கிடையில் ஆளுநரிடம் தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்ப இருப்பதாகவும், அதற்கு ஆளுநர் ஆளுநர் அலுவலகம் தெரிவிக்கும் பதிலை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாகவும், தமிழக அரசு கூறியுள்ளது.

இதன் மூலம் ஜுலை 30-ம் திகதி வழக்கு விசாரணைக்கு வரும் சூழ்நிலையில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஆளுநர் மாளிகை என்ன முடிவு எடுத்துள்ளது என்ற விவரத்தை கேட்டு பெற்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ஏற்கனவே தமிழக அமைச்சரவை அனுப்பியுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். எனவே அவர்களை கருணை அடிப்படையிலும், மனிதாபிமானம் அடிப்படையிலும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும், அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு முடிவு எடுக்கும் என்றும் அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பிய தீர்மானத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று நளினி ஒரு வழக்குத் தொடர்ந்தார்; அது நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்கு நேற்று மற்றோரு அமர்வில் விசாரணைக்கு வந்த போது அரசின் நிலைப்பாடை தெரிவிக்க 4 வார காலம் அவகாசம் கேட்கப்பட்டது.

ஆனால் 2012-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த ​ெராபர்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நீதிபதி எம்.எம்.

சந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆளுநர் மாளிகையில் அனுப்பியுள்ள தீர்மானம் தொடர்பாக நினைவூட்டல் கடிதம் அனுப்ப இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையும் நீதிபதிகள் பதிவு செய்து கொண்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்த நினைவூட்டல் கடிதத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதற்கு பிறகு கடந்த ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் இவை இரண்டு தொடர்பாகவும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.