நால்வரின் தூக்குத் தண்டனை – ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

சிறிலங்கா அரசாங்கம் 4பேரைத்  தூக்கிலிடுவது தொடர்பாக எடுத்த முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றப் போவதில்லை என்று ஐ.நாவிடம் அளித்த வாக்குறுதியை அந்த முடிவு மீறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரை தூக்கிலிட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது. இந்த 4பேரும் தூக்கிலிடப்பட்டடால், அது சர்வதேச சமுதாயத்திற்கும், முதலீட்டளர்களுக்கும் சிறிலங்கா மீதான தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த தூக்குத் தண்டனை முடிவை உடனடியாக நிறுத்துமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை, இங்கிலாந்து, கனடா, உள்ளிட்ட நாடுகள் கோரியிருந்த நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றியமும் வருத்தம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டால், காவல்துறை, பாதுகாப்பு மற்றும் வேறு பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய தொழில்நுட்ப உதவித் திட்டங்களை இங்கிலாந்து மறுபரிசீலனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.