முகத்தை மூடுவது குரானில் தடைசெய்யப்பட்டது;ஆனால் மூடவேண்டும் என மொழிபெயர்த்த உலமாக்கள் சபை – அப்துல் ராசிக்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும்விஷேட தெரிவுக்குழுவின் அமர்வு இன்று இடம்பெற்றது.

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் அளிப்பதற்காக சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக், தங்களுடைய நோக்கம் முஸ்லிம் மக்களுக்கு புனித குர்ஆன் மற்றும் ஹதீஸை சரியான ஆதாரங்களுடன் விளக்கப்படுத்துவதாகும் என தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து சாட்சி வழங்கிய அவர், ISIS என்பது இஸ்லாத்திற்கு விரோதமான தீவிரவாத இயக்கம் என்பதை 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி தாங்கள் தெளிவாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் தாங்கள் 2015 ஆம் ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்ட குர்ஆனின் 472 குறிப்பில் பெண்கள் முகத்தை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அது முஹம்மத் நபியின் மனைவிமார்களுக்கு மட்டுமே உரியது எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அகில இலங்கை ஜமியதுல் உலமா சபை அண்மையில் மொழிபெயர்த்து ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட குர்ஆனில் முகத்தை மூடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.