அவுஸ்திரேலியா கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்குமா அரசு? அதிகரிக்கும் அழுத்தம்

17
25 Views

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது.

அந்த தம்பதியின் பிள்ளைகளில் ஒருவரான மூன்று வயது தாருணிகா உடல் சுகவீனம் அடைந்ததால் பிரதான நிலப்பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அந்த சிறுமி பெர்த் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அளவீடுகள் தற்போது நிலையாக உள்ளன என்று அகதி குடும்பத்துக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், 10 நாட்களாக நோய்வாய்பட்ட சிறுமிக்கு உரிய நேரத்தில் போதிய சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்காக அவர்கள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் சட்டப்போராட்டத்தை தொடர்ந்துவரும் பிரியா-நடேஸ் குடும்பம் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்பட முடியாது என உள்துறை அமைச்சர் Karen Andrews தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here