மகிழடித்தீவு தமிழினப் படுகொலையின் நினைவு நாள் இன்று

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலம் பற்றுறுதி கொண்ட தமிழ் பழைமையூர் பசுமையூர் மகிழடித்தீவு கிராமம் இரத்த வெள்ளத்தில் மிதந்த நாள் ஆம் இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்பு 1991 ம் ஆண்டு யூண்மாதம் 12,ம் திகதி இனவெறி கொண்ட சிங்கள படையின் கொலைவெறியாட்டத்தில் மகிழடித்தீவு கிராமத்தில் சுமார் 65 பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.

அன்று மணல்பிட்டி சந்தியில் இருந்து உழவு இயந்திரத்தில் மண்முனை துறைக்கு றோந்து சென்ற படையினர் மீது விடுதலைப்புலிகள் மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் ஒரு கன்னி வெடித்தாக்குதலை நடத்தினர் இதில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் அதற்கு பழி தீர்க்கும் விதமாகவே ஆயுதங்களுடன் அத்து மீறி மகிழடித்தீவு கிராமத்தில் நுழைந்த கொலைவெறி படையினர் கண்டவர் நிண்டவர் ஆண் பெண் இளைஞர்கள் வயோதிபர் என கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுத்தள்ளினர்.

சிலரை பிடித்துச்சென்று அந்த கண்ணி வெடி இடம்பெற்ற மடுவில் படுக்க வைத்து சுட்டனர் இந்த சம்பவத்தை நேரடியாக பலர் கண்டும் உள்ளனர்

இந்த படுகொலையை அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராச்சிங்கம் உடனடியாக பாராளுமன்த்தில் தெரியப்படுத்திது மட்டும் அன்றி ச்தேச நாடுகளின் கவனத்துக்கும் கொண்டுவந்தார்.

இதனால் இந்த மகிழடித்தீவு படுகொலைக்காக ஒரு விசாரனை குழ அமைக்கப்பட்டு அதில் உயிர் இழந்தஉறவுகளின் உடன் பிறப்புகள் சாட்சியளுத்ததன் விளைவாக உயிர் இழந்தவர்களுக்கு மரணசான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டது.
இந்த படுகொலைக்கான நீதி 27 வருடங்கள் கடந்தும் இதுவரை கிடைக்கவில்லை.

சிங்கள இராணுவத்தின் கோரத்தாண்டவம்.சட்டி தொப்பியுடன் அடோ,அடோ,கொட்டி,கொட்டி என்கின்ற சத்தம் மேலோங்கியது.வீடுகள் எரிந்து புகைமூட்டமானது மகிழத்தீவு.உயிரை காக்க கொக்கட்டிச்சோலைக்கு ஓடும் கூட்டம் ஒரு புறம், உறவை தேடி அலையும் கூட்டம் மறுபுறம்.இந்த இன வெறியர்களின் வெறியாட்டத்தில் குமாரநாயகத்தின் அரிசி ஆலையில் இருந்த சிறுவர்கள்,முதியோர்கள்,பெண்களென வித்தியாசமில்லாமல்65க்கு மேற்பட்ட உயிர்களை நரபலியாடினர்.