யாழ். நூலக எரிப்பு ஞாபகார்த்தமாக மெய்நிகர் நூலகம் ஆரம்பம்

யாழ். நூலகம் எரிக்கப்பட்ட நாற்பதாவது ஆண்டு நினைவாக மெய்நிகர் நூலகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் பிள்ளைகள், புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து தொழில்சார் வல்லுநர்களாக இருக்கும் பிள்ளைகள் , புலம்பெயர் நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த மெய்நிகர் நூலகத்தை உருவாக்கியுள்ளார்கள்.

மே 30, 2021இல் திறக்கப்படவுள்ள இந்த மெய்நிகர் நூலகத்தை இணையவழியாக உலகத் தமிழர்கள் பார்ப்பதுடன், இளையோரின் இந்த முயற்சியை மேம்படுத்த, அடுத்த சந்ததிக்கு இதை எடுத்துச் செல்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றனர்.

இந்த மெய்நிகர் நூலகத்தில் ஆவணங்கள், தகவல்கள், புத்தகங்கள் யாவும் வரலாற்றின் உண்மைகளை வெளிக் கொண்டு வருபவையாக உள்ளன. இந் நூலகத்தில் தகவல், அறிவு, ஆராய்ச்சி போன்ற பல வகையான தகவல்களை அறிய முடியும். அத்துடன் தமிழிலும், ஆங்கிலத்திலும் இந்த மெய்நிகர் நூலகம் அமைந்துள்ளது. இரு மொழிகளிலும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆவணங்களை திரட்டி வருகின்றனர்.

யாழ். நூலகத்தை பேணிக் காக்கும் விதமாக இந்த நூலகம் அமையவுள்ளதாக  அறியப்படுகின்றது. எமது அரசியல், வரலாறு, முன்னோர் போன்ற தகவல்களை இந்நூலகம் மூலம் எடுத்துச் சொல்வோம் என நூலக ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளும் முனைவர் விஜய் அசோகன் அவர்கள் மக்களுக்கு அறிவித்துள்ளார்.