அவுஸ்திரேலியா: கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சர்வதேச வருகைகள்

39
53 Views

அவுஸ்திரேலியாவின் 2021-22 நிதிநிலை அறிக்கையில் புலம்பெயர்வு திட்டத்தின் கீழ் திறன்வாய்ந்த குடியேறிகளுக்கு 79,600 இடங்களும் குடும்ப மீள்-ஒன்றிணைவுக்களுக்காக 77,300 இடங்களும் என வெளிநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவில் குடியேறுபவர்களுக்கு 160,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே சமயம், மனிதாபிமான திட்டத்தின் கீழ், 13,750 அகதிகள் அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“2021ம் ஆண்டு முழுமையும் 2022ம் ஆண்டு நடுப்பகுதி வரையிலும் சர்வதேச வருகைகள் மாநில மற்றும் பிரதேச தனிமைப்படுத்தல் எண்ணிக்கைகள் அடிப்படையில் கட்டுப்படுத்தப்படும். இதில் பாதுகாப்பான பயண மண்டலங்களிலிருந்து செல்பவர்களுக்கு மட்டும் விலக்களிக்கப்படுகிறது,” என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில், அவுஸ்திரேலிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே பாதுகாப்பான பயண மண்டலம் ‘நியூசிலாந்து’ மட்டுமே ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here