தாயக மேம்பாட்டு பணிகள்

நேற்று, இன்று, நாளை – தாஸ்

யுத்த சூழ்நிலையாக இருந்தாலும், அன்று தாயக மேம்பாட்டு வேலைத் திட்டங்களில் உணவு உற்பத்தி முறையில் முழுமையான தன்நிறைவு நிலையிலேயே  இருந்தது. விதை, தானியங்கள் உள்ளீடுகள், உரங்கள், கிருமிநாசினி வகைகளுக்கு அரச கட்டுப்பாடற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தடைகள் காணப்பட்டபோது, பொருண்மிய கட்டமைப்பானது கட்டியெழுப்பப்பட்டு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்புச் செய்யும் நோக்கில் மாற்றுவகையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அங்குல நிலப்பரப்பிலும் சிறுதானிய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதுடன், சகல வீடுகளிலும் வீட்டுத்தோட்டம், பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

விவசாயிகளுக்கிடையே ஊக்குவிப்பு  மற்றும் போட்டிகள் உருவாக்கப்பட்டமையால் உழுந்து, பயறு, கௌபி, நிலக்கடலை போன்றவை ஒரு கிலோகிராம் நூறு ரூபாவிற்கு குறைவான விலையில் தாராளமாக கிடைத்தது. ஒவ்வொரு மக்களுக்கும் தேவையான அளவு போசாக்கு உணவு கிடைத்தமையால், முழுமையான பட்டினிச்சாவு தவிர்க்கப்பட்டதுடன், உடல் ஆரோக்கியமும் பேணப்பட்டு, தொற்றுநோய்கள், தொற்றாநோய்களுக்கு தாக்குப்பிடிக்கும் உடல்வலுவுள்ள மனிதர்களாக வாழ்ந்தார்கள்.  திட்டமிட்ட உணவு உற்பத்தி, எதிர்பார்க்கப்பட்ட இலக்கைவிட மேலதிகமாக உற்பத்தி செய்யப்பட்டமையால் வன்னி பெருநிலப்பரப்பில் இருந்து நெல் சிறுதானிய வகைகள் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டன. கிடைத்த உரம் சரியான வகையில் பங்கிடப்பட்டதுடன், இயற்கை உர உற்பத்திகளும் அதிகரிக்கப்பட்டது.

இன்றைய சூழ்நிலையில் ஒரு கிலோ உழுந்து, பயறு என்பன 1500 முதல் இரண்டாயிரம் ரூபா விலையில் காணப்படுகின்றது.  24 மணிநேர மின்சாரம், எரிபொருள் தேவையான அளவு குறைந்த விலையில் காணப்பட்டாலும் உள்ளூர் உற்பத்தியானது 25 சதவீதம்கூட ஏற்படவில்லை. இதன் காரணமாக இந்த விலையேற்றம் காணப்படுகின்றது.

1558090828 5616 தாயக மேம்பாட்டு பணிகள்

இன்று மக்களிடம் சத்துணவு தேவைகளில், போசாக்கு உணவுத் தேவைகளில் நாட்டம் குறைந்து நவநாகரீக உணவுகளில் – எந்தவிதமான சத்துகளுமற்ற உணவுகளின்மீது நாட்டம் அதிகரித்து  காணப்படுகின்றது. அதேவேளை உடல் உழைப்பை கொடுக்கும் அன்றிருந்த மனநிலை குன்றிகாணப்படுவதுடன், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் மனநிலை மேலோங்கி காணப்படுகின்றது. அதிக விளைச்சல்கண்டு அதிக இலாபம் ஈட்டவேண்டும் என்ற நோக்கில் செயற்கை உரத்தினை அதிகம் பயன்படுத்துகின்றார்கள். அதே நேரம் எமது பாரம்பரிய விதை தானியங்களை விடுத்து செயற்கை உரங்களுக்கு இசைவாக்கமடைந்த  குறுகியகால அறுவடைக் காலமுள்ள விதை தானியங்களை நாடுகின்றார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் கெடுவதுடன் விளைச்சல் மண்வளம் பழுதடைந்து தொடர் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

algae flora plant moss conifer tree yew bush vegetation dirt road தாயக மேம்பாட்டு பணிகள்

இந் நிலையிலும் உற்பத்தியாளர்கள் குறைந்த இலாபத்தையே ஈட்டுகின்றார்கள். வியாபாரிகளே அதிகவிலைக்கு விற்பதும், அதிக இலாபமீட்டுபவர்களாகவும் இருக்கின்றார்கள். கட்டுப்பாடற்ற இந்த நிலை விவசாயிகளை சோர்வடைய வைத்து, விவசாயத்தில் நாட்டத்தை குறைக்கின்றது. இந்நிலையில் மாற்றம் ஏற்படவேண்டும். எமது மக்கள் சொந்தக் காலில் நிலைத்து நிற்க வேண்டுமாயின் மாற்று வகையான சிந்தனைகளில் ஈடுபட வேண்டும். முழுமையான நிலங்களும் பயன்படுத்தப்பட வேண்டும். உழவர் சந்தைகள் உருவாக்கப்படல் வேண்டும். நல்ல தரமான விதை தானியங்கள், இயற்கை பசளைகள், உள்ளூர் உற்பத்தி முயற்சிகள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். கூட்டு முறையில் ஒருங்கிணைந்த திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு முறைகள் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கான பயிற்சிகள், முயற்சிகளும் இருந்தும் இன்று கைவிடப்பட்ட நிலமையே காணப்படுகின்றது.

01 10 manure தாயக மேம்பாட்டு பணிகள்

மிகவும் தூய விதை உற்பத்தி பண்ணைகளை உருவாக்க வேண்டும். பால் உற்பத்தி விற்பனை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் . விவசாயம், கால்நடை வளர்ப்பு  என்பது ஒவ்வொரு மக்களினதும்  இரண்டு கண் போன்றது. பயிர் அது உயிர். அதை முதன்மையாக பேணி பாதுகாக்க வேண்டும். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல் கோழியில்லா ஊர், போசாக்கற்ற ஊர் என்ற நிலையில் இருந்து நாம் பூரணமாக உணர்ந்து வீட்டுக்கு வீடு வீட்டுத்தோட்டம்,  கோழி வளர்ப்பு, பால் தரும் பசுமாடு வளர்ப்புத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். தாயக மேம்பாட்டுப் பிரிவு இதற்கான பரீட்சார்த்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இத்திட்டம் வருமானம் தரும் முயற்சித்திட்டம் மட்டுமல்ல, எதிர்கால சமுதாயம் ஆரோக்கியமாகவும், போசாக்கு உள்ள மக்களாகவும் இருக்க இத்திட்டம் மிகவும் அவசியமாகும்.

தனி மனிதன் தன்நிறைவு அடைந்தால், அந்த கிராமம் தன்நிறைவு அடையும். கிராமம் தன்நிறைவு அடைந்தால், பிரதேசம் தன்நிறைவு அடையும். இதனால் மாவட்டம் தன்நிறைவு அடையும். மாவட்டம் தன் நிறைவு அடைந்தால், மாநிலம் தன் நிறைவு அடையும். எனவே நேற்றைய நிலமை இன்று மாற வேண்டும். இன்று மாற்றம் ஏற்பட்டால் நாளை நம் தாயகம் எல்லா வளத்தையும் பெற்று மிகவும் தன்நிறைவான மக்களைக்கொண்ட நாடாக மாறும். உழைத்து  வாழ வேண்டும். பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே. ஆனால் பிறர் உழைப்பை பயன்படுத்தி  தன்நிறைவான வாழ்வை நீ வாழ்வதுடன் பிறரையும் தன்நிறைவான  வாழ்வை வாழ உண்மையான வழி காட்டியாகவும், பிறர் கையை நம்பி வாழாத நிலமையினை உருவாக்கி முன்னுதாரனமாக இரு.

அடுத்த சந்ததி உன்னைப்பார்த்து உன் வழித்தடங்களை தொடரக்கூடிய வகையில் கிடைத்த உதவிகள் ஒவ்வொரு சதத்திற்கும் உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடன் செயற்பட்டால்தான் ‘என்ன வளம் இல்லை எம் நாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’ என்ற பாடல்கள் வரியுடன் வாழ முடியும். உனக்கு கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி தேடி முழுமையான வளத்தின் உச்ச பயன்பாட்டை பயன்படுத்தி தன்நிறைவான சமுதாயத்தை உருவாக்கும் பணியில் நீ ஓடிக்கொண்டே இரு.

தொடர்புபட்ட கட்டுரைகள்: