வெவ்வேறு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை ஒருவருக்கு வழங்க முடியுமா?-  ஆராய்கிறது இலங்கை  

வெவ்வேறு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை ஒருவருக்கு வழங்க முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது.

அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை ஏற்கனவே பயன்படுத்தியவர்களிற்கு இரண்டாவது டோஸினை வழங்குவதற்கான தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் அற்றுப்போகதொடங்கியுள்ளதை தொடர்ந்தே இலங்கை இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது காணப்படும் நிலைமையை அவதானிக்கின்ற போது சீரம் நிறுவனம் அடுத்த கட்ட தடுப்பூசிகளை வழங்கும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை என தெரிவித்துள்ள தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர, பேச்சுவார்த்தைகள் தொடருகின்ற அதேவேளை கூடியவிரைவில் தடுப்பூசிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக இரண்டு நிறுவனங்களின் கொரோனா வைரஸ் தடுப்பூசியைகலந்து பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிகள் ஆரம்பமாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆராய்ச்சி வெற்றியளித்தால் முதலில் அஸ்டிராஜெனேகாவை பயன்படுத்தியவர்களிற்கு மற்றொரு நிறுவனத்தின் தடுப்பூசி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.