இந்தியாவில் பரவும் கொரோனா இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிப்பு

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த  கொரோனா  பாதிப்பு, வடக்கு இத்தாலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி சுகாதாரத்துறை தரப்பில், “இந்தியாவிலிருந்து சமீபத்தில் இத்தாலிக்கு வந்திருந்த தந்தை, மகள் இருவருக்கும் உருமாற்றம் அடைந்திருந்த  கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவிலிருந்து வரும் நபர்களுக்கு இத்தாலி அரசு 14 நாட்களுக்குத் தடை விதித்துள்ளது.

மேலும் இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளிலும்   கண்டறியப்பட்டுள்ளது ன்றும் இந்த வகை கொரோனா வைரஸ்கள் தொற்றை அதிவேகமாகப் பரப்பும் தன்மை உடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.