மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா?

வரலாற்றில் பெரும்பாலான காலம் இராணுவ ஆட்சியில் இருந்த மியான்மரில், 2015ஆம் ஆண்டுதான் சுதந்திரமான தேர்தல்கள் நடத்தப்பட்டு, ஆங் சான் சூகி தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.

இதையடுத்து 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் புலம்பெயர்ந்தனர். இந்த சம்பவத்தால் ஆங் சான் சூகி தலைமை யிலான அரசு சர்வதேச ரீதியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்த சூழலில் 2020ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப் பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது மியான்மர் இராணுவம். அத்தோடு ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்களையும் கைது செய்து ஓராண்டுக்கு அவசரகால பிரகடனத்தையும் செய்துள்ளது.

இந்நிலையில், இந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டங்களின் போது 45 குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்களை இராணுவம் சுட்டுக் கொன்று ள்ளது. இந்த சம்பவங்களுக்கு ஐ.நா மற்றும் பல நாடுகள் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மியான்மரில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல் குறித்து இந்திய சமூக நீதி ஊடக மையத்தின் தலைவர் “ஊடகச்செம்மல்” பவா சமத்துவன் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய செவ்வியை 123ஆவது மின்னிதழில் பார்த்தோம்.

அதன் தொடர்ச்சியாக தமிழ் பிரபாகரன் (சர்வதேச ஊடகவியலாளர்),  தோழர் பாஸ்கர் (தமிழகம்), சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இராமு.மணிவண்ணன் ஆகியோர் பதில் அளித்துள்ளனர்.

unnamed 3 மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா?

தமிழ் பிரபாகரன்
(சர்வதேச ஊடகவியலாளர்)

கேள்வி – மியான்மர் மீது தடைகளை கொண்டு வர மேற்குலகம் முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்தியா அதில் மௌனம் காப்பது ஏன்?

பதில் – இந்த மெளனத்திற்கான காரணம் சீனா. இந்த சூழலை நீங்கள் இலங்கை- இந்தியா உறவுடன் சற்று ஒப்பிட்டு பார்க்கலாம். சீனா உள்ளே வந்துவிடும், ஊடுருவி விடும் என்ற பார்வையில் தான் இலங்கை அரசை இந்திய அரசு தொடர்ந்து ஆதரித்து வருகிறது. மியான்மரையும் அந்த வகையிலேயே அணுகுகிறது இந்தியா.

மியான்மருக்கு நாம் எதிரியாக மாறினால் சீனா மியான்மரை முழுமையாக தனது பிடிக்குள் கொண்டு வந்துவிடும் என இந்தியா எண்ணுகிறது. அந்த எண்ணத்திற்கு ஏற்ப எந்த ஆட்சி முறை இருந்தாலும் நட்புறவாக இருக்கவே இந்தியா நினைக்கிறது.
மாறாக மியான்மர் மக்களிடையே இந்தியா குறித்த பார்வை எப்படி சீர்குலையும் என்றோ தஞ்சம் கோருபவர்களை வர விடாமல் தடுக்கும் நடவடிக்கை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை உணர இந்தியா தயாராக இல்லை.

இலங்கை, மியான்மர் எனும் இருபுறத்தில் உள்ள இராணுவ ஆதிக்க ஆட்சியை ‘சீனா’ எனும் ஒருபுள்ளியில் இருந்தே இந்தியா பார்க்கிறது. நிதியையும், பயிற்சியையும் கொடுத்து கொடுத்து அந்நாடுகளுடனான உறவை சுமுகமாக வைத்திருக்கவே இந்தியா விரும்புகிறது.

images மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா?

தோழர் பாஸ்கர்(தமிழகம்)

கேள்வி –  மியான்மர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன?

பதில் – சீனாவானது மியான்மர் விவகாரத்தில் அங்கு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டதற்கு ஆதரவான நிலைப்பாட்டையே மேற்கொண்டுள்ளது. இது காலங் காலமாய் இருந்து வருவதே சீனாவானது மியான்மர் இராணுவத்தின் மூலமாகத்தான் அந்நாட்டில் தனது மேலாதிக்கத்தை பராமரிக்க முடியும் என்ற மதிப்பீட்டின் பேரில் அவ்வாறு செய்து வருகிறது.

இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு முன்பு சில ஆண்டுகளாக இந்தியாவும், தென் கொரியாவும் அங்கு முதலீடுகளை சீனாவுக்கு போட்டியாய் குவித்தன. இப்பொழுதோ சீனாவானது எப்போட்டியும் இல்லாமல் தனது மேலாதிக்கத்தை முழுவதுமாய் நிறுவு வதற்கு அண்மையில் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை ஆதரிக்கிறது.

கண்டங்களை கடந்த திட்டமான சீனாவின் ‘One Belt One Road’ எனும் சீன ஏகாதி பத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கான அங்கமாகவும் சீனாவின் இத்தகைய முடிவு அமைகிறது. சீனாவானது மியான்மர் ஆட்சியாளர்களுக்கு தேவையான மூலதனத்தை யும் இராணுவப் பாதுகாப்பையும் வழங்குவதற்கு தயாராய் இருக்கிறது.

அமெரிக்காவில் டிரம்ப்பின் இடத்தில் ஜோ பைடன் அமர்ந்தது என்பதும் சீனாவுக்கு வசதியாகி விட்டது. டிரம்ப்புக்கு முந்தைய ஜனாதிபதிகளைப் போல் மியான்மர்மீது தடைகளை விதிக்கக்கூடியவர் என்பதால் மியான்மரின் முந்தைய இராணுவ ஆட்சி யாளர்கள் போல் தற்போதைய ஆட்சியாளர்கள் இத்தடைகளை எதிர்கொள்வதற்கு சீனாவின் மீது சாய்ந்து தமது இராணுவ அதிகாரவர்க்க முதலாளியச் சுரண்டலை மேற் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

edit மியான்மரில் இராணுவ ஆட்சி ஒழியுமா?

பேராசிரியர் இராமு.மணிவண்ணன்(சென்னைப் பல்கலைக்கழகம்)

கேள்வி – மியான்மர் விவகாரம் ஒரு பூகோள அரசியல் நகர்வாக பார்க்குமிடத்தில் இதில்  இந்தியாவின் நிலைபாடு என்ன?

பதில் – மியான்மரில் நடந்துள்ளது அரசியல் மாற்றம் என்று சொல்ல முடியாது, ஜனநாயக ரீதியிலான போராட்டமும், ஜனநாயக ஆட்சி மலர்வதற்கு எதிராக மிகப் பெரும் தடைகளை ஏற்படுத்தி செயற்படுத்திக் கொண்டிருக்கும் மியான்மர் இராணுவ ஆட்சியின் சர்வதிகார ஒரு சூழலும் அங்கு நிலவுகின்றது.

எனவே புவிசார் அரசியல் என்று பேசும் போது, மேற்கத்தைய நாடுகள் இப்பொழுது மியான்மருக்கு எதிரான ஒரு சூழலை, அதாவது பொருளாதார தடை மற்றும் இராணுவ தளபாடங்களுக்கான தடைகளைக் கொண்டுவரலாம்.

அத்தோடு இது  சீனாவிற்கும் மியான்மருக்கும் இருந்த ஒரு உறவினை இப்பொழுது ஒரு அதிகார பூர்வமானதாக மட்டுமல்லாமல் புவிசார் அரசியல் ரீதியாகவும் ஒரு வலிமையான ஒரு தோற்றத்தைக் காண்பிக்கின்றது.

இலங்கையை சேர்ந்த ஒரு அரசியலாக பேசும் போதும் கூட, ஒரு சர்வதிகார போக்குள்ள எல்லா நாடுகளிலுமே சீனா மிக நெருக்கமாகவும் தனது நெருக்கத்தைப் பயன்படுத்துவதாகக் கூறி அந்த நாடுகளின் அதிகார மையங்களை தக்கவைப்ப தோடு மட்டுமல்லாமல், தனக்கான மிகப்பெரிய புவிசார் அரசியல் ஆதாயத்தையும்  தேடிக்கொண்டுள்ளது.

எனவே இது உள்நாட்டில் நடக்கின்ற மனித உரிமைக்கான போராட்டமோ அல்லது ஜனநாயகத்திற்கான போராட்டமோ கிடையாது. இவை அனைத்துமே புவிசார் அரசியல் ரீதியாக சீனாவிற்கும்  மேற்கத்தைய நாடுகளுக்கும் நடந்து வரும் ஒரு ஊடலாக கூட நாம் இதை பார்க்க வேண்டும்.

அதனால் ஜனநாயகப் போராட்டத்திற்கும்  சர்வதிகார இராணுவ ஆட்சிக்கும் இடையி லான இந்தப் போராட்டத்தில், புவிசார் அரசியலும் பெருமளவிற்கு பங்காற்றிக் கொண்டு இருக்கின்றது.