கொரோனா பரவல் முடிவுக்கு வர நீண்ட நாட்களாகும் -WHO

44
90 Views

கொரோனா பரவல்  முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என  உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரிசிஸ்  (Tedros Adhanom Ghebreyesus)தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த டெட்ராஸ் அதானம்,“ பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருகிறது.

தங்களுக்கு கொரோனா வராது என இளம் வயதினர் திடமாக நம்புகின்றனர், ஆனால் அது தவறு . எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் இத்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை” என்றார்.

இது வரையில் உலகம் முழுவதும் தற்போது 13,72,48,180 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை 29 இலட்சத்து 58 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  –  பாதிப்பு- 3,19,89,157, உயிரிழப்பு –  5,76,298

இந்தியா   –   பாதிப்பு- 1,36,86,073, உயிரிழப்பு –  1,71,089

பிரேசில்   –   பாதிப்பு- 1,35,21,409, உயிரிழப்பு –  3,55,031

பிரான்ஸ்  –   பாதிப்பு –  50,67,216, உயிரிழப்பு –   99,135

ரஷ்யா      – பாதிப்பு –  46,49,710, உயிரிழப்பு –   1,03,263

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here