சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இம்மாதம் இலங்கை வருகின்றார் – ஜனாதிபதியுடன் முக்கிய பேச்சு

101
167 Views

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

மாதஇறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் அரசதலைவர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் விஜயத்திற்கான திகதிகள் இன்னமும் உறுதியாகாத போதிலும் அவர் புதுவருடத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த விஜயத்தின் போது சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்.

இதேவேளை இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here