விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்துாண் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

22
48 Views

இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவுத்துாண் எழுப்பவுள்ளதாக பாரதிய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம், பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் எந்த தீர்வும் எட்டப்படாமல் தொடர்கின்றன.

மேலும் இந்தப் போராட்டத்தில் 320க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களது தியாகங்களை நினைவு கூறும் விதமாக காசீப் பூர் -காஜியாபாத் எல்லைப்பகுதியில் நினைவுத்துாண் எழுப்புவதாக விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.

மேலும், டெல்லியில் போராடும் விவசாயிகளின் ஊர்களிலிருந்து மண் எடுத்து வரப்பட்டு நினைவுத்துாண்  எழுப்பப்படும் இடத்தில் வைக்கப்படும் எனவும் இதே போன்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் ஊரில் இருந்தும் மண் எடுத்து வரப்பட்டு நினைவுத்துாண் எழுப்பப்படும் இடத்தில் வைக்கப்படும் என்றும் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த நினைவுத்துாண் அடிக்கல் நாட்டு விழாவில் இன்று விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்தும், சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரும் பங்கேற்று உள்ளனர்.

இத்துாண் குறித்து கருத்து தெரிவித்துள்ள விவசாயிகள் சங்கத்தின் ஊடக பொறுப்பாளர் தர்மேந்திரா,“ இங்கு நிரந்தரமாக நினைவுத்துாண் எழுப்பப்படும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here