கைவிடப்பட்ட வீட்டுத்திட்டங்கள் – வடக்கு கிழக்கு மக்கள் பாதிப்பு

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார அமை ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள், கைவிடப்பட்ட நிலையில் பெருமளவிலான மக்கள் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தற்போது வரை முழுமையடையாத நிலையில், காணப்படுகின்றது.

புதிய அரசாங்கத்தினால் புதிய வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெற்று வருகின்ற போதும் 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களையே குறித்த வீட்டுதிட்ட பயனாளிகளாக  தெரிவு செய்து திட்டங்கள் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மிகுதிப்பணம் வழங்கப்படாத நிலையில், மேலும் அம் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பாக  அரச அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடம் கோரிக்கைகள் முன்வைத்த போதும் இது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று  பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.