கொரோனா பாஸ்போர்ட் ஏன் வழங்கப்படுகின்றது?

கடந்த ஓராண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று சூழல் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் பயணத்திட்டங்களை முற்றிலுமாக சீர்குலைத்திருக்கிறது. இந்த சூழலில், கொரோனா பாஸ்போர்ட் என்ற சொல்லாடல் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றது.

கொரோனா பாஸ்போர்ட் என்றால் என்ன?

கொரோனா பாஸ்போர்ட் என்பது கொரோனா பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்தியிருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா பாஸ்போர்ட் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. இது டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் எனவும் அல்லது நடைமுறையில் உள்ள பாஸ்போர்டுடன் ஒரு சான்றிதழாக வழங்கப்படும் எனவும் சொல்லப்படும் நிலையில் இது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இப்பெருந்தொற்று சூழல் நம்மைவிட்டு கடக்கும் வரை, கொரோனா பாஸ்போர்ட் பயன்பாடு சர்வதேச பயணங்களில் முக்கிய இடத்தை வகிக்கும் எனக் கருதப்படுகின்றது.