டெல்லியில்  இன்று விவசாயிகளின்  டிராக்டர்  பேரணி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில்  விவசாயிகள் இன்று டிராக்டர் (உழவு இயந்திரம்)   பேரணி ஒன்றை நடத்துகின்றனர்.

இதற்காக  ஆயிரக்கணக்கான  டிராக்டர்களுடன்  விவசாயிகள் டெல்லியில் குவிந்துள்ளனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை  செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை இரத்து செய்யக் கோரி பஞ்சாப், ஹரியாணா மாநில  விவசாயிகள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தொடர் போராட் டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இந்தியக் குடியரசு தினமான இன்று டெல்லியில் பிரம்மாண்ட டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று  விவசாயிகள் அறிவித்திருந்ததன் படி இன்று இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மறுத்ததால், அவர்களோடு, விவசாயிகள் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையும், தோல்வியில் முடிந்துள்ளன.

 இந்நிலையில் குறித்த மூன்று வேளாண் சட்டங்களையும் இரத்து செய்யக் கோரி இந்திய குடியரசு தினமான இன்றைய தினம் விவசாயிகள் முன்னதாக திட்டமிட்ட படி டிராக்டர் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகின்றது.

பேரணியில் ஐந்தாயிரம் டிராக்டர்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், மதியம் தொடங்கும் பேரணியை மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும் சாலையில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே பேரணி செல்ல வேண்டும், பேரணி ஒரே திசையில் மட்டுமே செல்ல வேண்டும்,பேரணியை இடையில் நிறுத்தக் கூடாது  ஆகியவை முக்கிய நிபந்தனைகளாகும். எனவே இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், தடையில்லா சான்றிதழ் இரத்து செய்யப்படும் என்றும், பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பேரணியில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது என்று, விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.