மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்

50
78 Views

மலேசியாவில் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார் அந்நாட்டின் மாமன்னர்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஏதுவாக இந்த அறிவிப்பு இன்று  வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று மாலை மலேசியாவில் இரண்டாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (லாக் டவுன்) அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நடவடிக்கையானது இராணுவப் புரட்சி அல்ல என்றும், நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்றும் மலேசியப் பிரதமர் மொகிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here