தமிழ் அகதி குடும்பத்தை விடுவியுங்கள் – அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம்

93
209 Views

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை அவுஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

அதே நேரம் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக்கோரி அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கங்காரு பாய்ண்ட் விடுதிக்கு முன்பாக 1000த்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், பல ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டு, விடுதி ஒன்றில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி மேற்குறிப்பிட்ட போராட்டம் நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here