கோவிட்-19: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது!

உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் முதல் கட்ட அலை முடிந்த நிலையில், தற்போது 2ஆவது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தற்போது இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 7,76,86,841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,45,61,756 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 08 ஆயிரத்து 235 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,14,16,850 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,06,220 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:- இங்கிலாந்து – 20,73,511 துருக்கி – 20,43,704 இத்தாலி – 19,64,054 ஸ்பெயின் -18,30,110 ஆர்ஜென்டினா – 15,47,138 ஜேர்மனி – 15,34,116 கொலம்பியா – 15,18,067 மெக்சிக்கோ – 13,20,545 போலந்து – 12,07,333 ஈரான்- 11,64,535 பெரு – 9,97,517 உக்ரைன் – 9,70,993 தென்னாபிரிக்கா – 9,30,711