அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்கள் எதிர்கொள்ளும் மனச்சவால்கள்

கொரோனா பெருந்தொற்று சூழலினால் அவுஸ்திரேலியாவை நோக்கி வருபவர்கள் எண்ணிக்கை கடுமையாக வீழ்ந்து காணப்படுகின்றது. இந்த நிலை தற்காலிக மற்றும் நிரந்தர விசாவாசிகளின் உணர்வு நிலை வெகுவாகப் பாதித்துள்ளது என்றே கூற வேண்டும். கொரோனா சூழலினால் ஏற்பட்ட வருவாய் இழப்பினால் இவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போதைய நிலையில், அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க உரிமைப் பெற்றவர்கள் கூட அவுஸ்திரேலியாவுக்கு தங்களது குடும்பத்தினரை அழைத்து வர முடியாத இக்கட்டான நிலைமையில் இருக்கின்றனர். கொரோனா கால கட்டுப்பாடுகளினால் இவர்கள் குடும்பத்தினருடன் இணையவோ ஓர் அவசர தேவைக்காக இவர்கள் குடும்பத்தினரை காண பயணிப்பதோ சாத்தியமற்றதாக உள்ளதால் நிரந்தரமாக வசிக்கும் வெளிநாட்டவர்கள் (Permanent Residents) மன ரீதியான அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.