கொரோனா தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியது ரஷ்யா

64
93 Views

கோவிட்-19 நோய்க்கு தங்கள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட  ஸ்புட்னிக் V தடுப்பூசி பயன்பாடுத்த ரஷ்யா அனுமதியளித்துள்ளது.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், நோய்த் தொற்று அதிகம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா. ஸ்புட்னிக் V தடுப்பூசி ரஷ்யாவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த தடுப்பூசி, 95 சதவீதம் கொரோனோ தொற்றுகளைத் தடுக்கக்கூடியது என்றும், பெரிய பக்க விளைவுகள் ஏதும் இதனால் ஏற்படவில்லை எனவும் இந்த மருந்தை உருவாக்கிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கம், பெரிய அளவிலான பரிசோதனைகளும்  நடைபெறுவதாக கூறப்படுகின்றது.

இரண்டு முறை செலுத்தும் வகையில் இந்த தடுப்பூசி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் ஊசி போடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில்,மாஸ்கோ மாநகரில் 1 கோடியே 30 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பள்ளிகளில், சுகாதாரத் துறையில் வேலை செய்கிறவர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் ஆகியோருக்கு இந்த ஊசி போடப்படுவதாக மாநகர மேயர் செர்கெய் சோபியானின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here