சுகாதாரமற்ற அகதிகள் தடுப்பு முகாம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வழக்கு

167
308 Views

வன்முறை நிகழக்கூடிய, கரப்பான் பூச்சிகள் பெருகிய சுகாதாரமற்ற Yongah Hill தடுப்பு முகாமில் தன்னை தடுத்து வைத்திருந்ததாக ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக ஆப்கான் அகதி ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வசிக்க உரிமைப்பெற்றவராக அந்த அகதி இருந்த போதிலும அவர் சிறைவைக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகின்றது. இந்த வழக்கில் சமீபத்திய முன்னேற்றமாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலன் டஜ் இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக நடந்து கொண்டதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

உதவித்தொகை இழக்கப்போகும் அகதிகள் ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்த தருணத்தில், ஆஸ்திரேலியா எங்கும் சமூகத் தடுப்பில் உள்ள அகதிகள் அதிர்ச்சியடையும் வகையில் அந்நாட்டு அரசு ஒரு முடிவை எடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,கொரோனா பெருந்தொற்று சூழலுக்கு இடையில், வேலைக்கிடைப்பது பெரும் சிரமமாகி உள்ள நிலையில் சமூகத்தடுப்பில் உள்ள அகதிகள் வெளியேற்ற ஆஸ்திரேலிய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

“எங்களுக்கு மூன்று வாரங்கள் அரசு கெடு விதித்துள்ளது. அதற்குள் நாங்கள் வேலையைத் தேடிக் கொண்டு, வாடகைக்கு வீடு எடுத்து, வீட்டுக்கான பொருட்களை வாங்கி சென்று விட அறிவுறுத்தப்பட்டுளது. இது முட்டாள்தனமான செயல்பாடு,” என்கிறார் இந்த முடிவினால் பாதிக்கப்பட்டுள்ள ஓர் அகதி.

சமூகத் தடுப்பிலிருந்து ஓர் அகதி வெளியேறும் பட்சத்தில், அரசின் குறைந்தபட்ச உதவித்தொகை இவர்களுக்கு வழங்கப்படாது. இவ்வாறான அகதிகள் ஆஸ்திரேலியாவில் தற்காலிக மனிதாபிமான விசா பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here