யாழ்ப்பாணத்தில் படையினரால்”நல்லிணக்க மையம்”திறந்து வைப்பு

அண்மையில் (ஜூலை 25) யாழ் சித்தங்கேணிப்பகுதியில் ´நல்லிணக்க மையம்´ ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி, மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் குறித்த நல்லிணக்க மையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.சிவில் சமூகத்தின் விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உள்நாட்டு வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்த நேரடியாக ஒத்துழைப்பு வழங்கும் நோக்கத்துடன் இந்த மையம் நிறுவ பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் இங்கு வசிக்கும் இளைஞர்களின் ஆற்றல்ள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தி சிவில் மற்றும் இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் குறித்த நிலையம்அமைப்பட்டுள்ளதாக படையினர் தெரிவிக்கின்றனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத நன்கொடையாளர் ஒருவரினால் குறித்த நிலையத்தின் புனர்நிர்மாண பணிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் பராமரிப்பு பணிகளை யாழ் இராணுவத்தினர் மேற்கொள்வர் என தெரிவிக்கப் படுகின்றது.

ஆனால் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை,மற்றும் பல்வேறுபட்ட சமூக சீரழிவுகளின் பின்னணியில் சிறிலங்கா படையினர் இருப்பது தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் படையினரின் இந்த ´நல்லிணக்க மையம்´ தொடர்ப்பன செயற்பாடு சந்தேகங்களை தோற்றுவிப்பதாகவே உள்ளது.

மேலும்குடாநாட்டில் சிவில் நிருவாகத்தில் படையினரின் தலையீடுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த மையம் அதன் ஒரு வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது.