கொழும்பில் சீனர்கள் பேருந்துகளில் ஏறினால் தலைதெறிக்க ஓடும் மக்கள்

கொழும்பு உட்பட பல பகுதிகளில் பேருந்துகளில் சீனாவை சேர்ந்தவர்கள் ஏறும் போது ஏனைய பயணிகள் அங்கிருந்து விலகிச் செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் காரணமாக பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சீன நாட்டவர்கள் அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளில் ஏறும் போது ஏனைய பயணிகள் பேருந்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

மாத்தறையில் இருந்து கொட்டாவ மற்றும் கடுவெல பேருந்தில் பயணிகள் குவிந்திருந்த நிலையில் ஒரு வெளிநாட்டு பயணி பேருந்தில் ஏறியமையினால் ஏனைய பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கியுள்ளனர்.

நெடுஞ்சாலையில் பயணிகள் இறங்கினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் இதனால் பேருந்திற்கு ஏறுமாறு நடத்துன்னர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏதாவது ஒரு வகையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாத்திக்கப்பட்ட சீன நாட்டவர் பேருந்தில் இருந்தால், ஒன்றரை மணி நேரத்திற்குள் தங்கள் உடலிலும் தொற்றும் ஆபத்து உள்ளமையினால் தாம் ஏற முடியாதென பயணிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலைமையின் போது தான் பேருந்தை விட்டு வெளியேற முடியாதென கூறி சீன நாட்டவர் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த நெடுஞ்சாலையில் நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வேறு பேருந்துகளில் பயணிகள் ஏறிச் சென்றுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பலர் பதிவு இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.