கென்னியாவில் படைத்தளம் மீது தாக்குதல்;மூன்று அமெரிக்கர் பலி,விமானங்களும் அழிப்பு

கென்யாவின் லாமு கவுண்டியில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை அல்-ஷபாப் தீவிரவாத குழு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க மற்றும் கென்ய இராணுவ வீரர்கள் பயன்படுத்திய முகாமே இவ்வாறு  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.இதில் குறைந்தது 03 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.இதில் ஒருவர் படைவீரர் எனவும் மற்றைய இருவரும் ஒப்பந்தக்காரர்கள் எனவும் தெரியவருகிறது.

ஆப்பிரிக்காவிற்கான அமெரிக்க இராணுவத் தளபதி அப்ரிகொம் தனது சுருக்கமான அறிக்கையில் தாக்குதல் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் கூறியுள்ளன.

அல்-ஷபாப் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது.  இந்த தாக்குதல் குறித்து கென்யா பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ENgrH8wXUAAs9AK கென்னியாவில் படைத்தளம் மீது தாக்குதல்;மூன்று அமெரிக்கர் பலி,விமானங்களும் அழிப்பு

இரண்டு அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு செஸ்னா விமானம் மற்றும் “பல” அமெரிக்க இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. கென்ய செஸ்னா விமானமும் அழிக்கப்பட்டது எனவும் கென்ய பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவிக்காமல், ஏழு விமானங்களையும் மூன்று இராணுவ வாகனங்களையும் அழித்ததாக அல்-ஷபாப் கூறியுள்ளது.