இந்தியக் குடியுரிமைப்பிரச்சனை மதப்பிரச்சனை மட்டுமல்ல- வேல் தர்மா

284
127 Views

நரேந்திர மோடியின் அரசின் இந்திய குடியுரிமைச்சட்டம் நான்கு முனைகளில் எதிர்க்கப்படுகின்றது. 1. இந்தியாவின் வாழும் இஸ்லாமியர்கள், 2. அசாமியர்கள், 3. வங்காளிகள், 4. மதசார்பற்ற நிலையைப் பேண விரும்புபவர்கள். இந்திய வாக்காளர்களின் மொத்த தொகையில் இஸ்லாமிய வாக்காளர்களின் வீதாசாரம் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்ய மோடி அரசு முயல்கின்றதா என்ற ஐயத்தையும் இந்தியக் குடியுரிமைச் சட்டம். முத்தலாக் சட்டம், கஷ்மீர் மக்களின் உரிமை பறிப்பு, பாபர் மசூதி இடிப்பு போன்றவற்றிற்கு வன்முறை மூலம் எதிர்ப்புத் தெரிவிக்காத இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் மோடி அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்றார்கள்.

னித நேயத்துடன் கொண்டு வரப்பட்ட சட்டமல்ல

ஆப்கான், பாங்களாதேசம், பாக்கிஸ்த்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தரகள், பார்சியர்கள், ஜைனியர்கள், கிருத்தவரகள் ஆகியோருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கக் கூடிய வகையில் இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தை இந்திய அரசு மாற்றியது. இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகளில் மத அடிப்படையில் மக்கள் ஒடுக்கப்படுகின்றார்கள். சீனாவின் உய்குர் மாகாணத்தில் இஸ்லாமியர்கள் கொடுமையாக நடத்தப் படுகின்றார்கள். மியன்மாரில் இஸ்லாமியர்கள் இனக்கொலைக்கு உள்ளாக்கப் படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்தியாவில் தஞ்சம் கோரி உள்ள இலங்கைத் தமிழர்களைப் பற்றி மோடி அரசு கவலை கொள்ளவில்லை.

நிலத்துக்காக போராடும் அசாமியர்கள்.

அசாமியர்கள் தமக்கு என ஒரு சிறந்த கலாச்சாரத்தையும் தனித்துவத்தையும் கொண்ட ஓர் இனம். அவர்கள் தங்கள் மண்ணில் அந்நியர்கள் வந்து குடியேறுவதற்கு எதிராக நீண்ட காலமாகப் போராடுகின்றார்கள். நீர் வளமும் கனிம வளமும் நிறைந்த அவர்களது மண்ணில் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் அவர்களது தேயிலைத் தோட்டத்தில் கூலி வேலை செய்ய வேண்டியவில்லை. அதனால் கிழக்கு வங்காளிகளை பிரித்தானியர்கள் அசாமின் பெருந்தோட்டங்களில் பணிக்கு அமர்த்தினர்.

அசாமியர்களின் எதிர்ப்பால் வெளியில் இருந்து வருபவர்கள் அசாமில் நிலம் வாங்கி நிரந்தரமாகத் தங்க முடியாது என்ற சட்டத்தை பிரித்தானியர்கள் உருவாக்கி இருந்தார்கள். அந்நியர்கள் வந்து அசாமில் குடியேறும் நிலை இரண்டாவதாக பாக்கிஸ்த்தானும் இந்தியாவும் 1947-ம் ஆண்டு பிரிந்த போது ஏற்பட்டது. கிழக்கு வங்காளத்தில் இருந்து இந்து வங்காளிகள் அசாமில் தஞ்சமடைந்தனர். அதை அடுத்து அசாமியர்கள் எதிர் கொண்ட குடிவரவுப் பிரச்சனை 1971இல் பங்களா தேசம் பாக்கிஸ்த்தானில் இருந்து பிரியும் போராட்டம் நடந்த போது உருவானது.

அப்போது பங்களா தேசம் என அழைக்கப்படும் கிழக்கு வங்காளத்தில் இருந்து இந்து வங்காளிகளும் இஸ்லாமிய வங்காளிகளும் அசாமில் தஞ்சமடைந்தனர். அதைத் தொடர்ந்து தமது மண்ணில் உள்ள சட்ட விரோதமாகக் குடியேறியவர்களுக்கு எதிராக அசாமியர்கள் வன்முறை மிக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் 1985இல் ராஜீவ் காந்தி அரசுக்கும் அசாமியத் தலைவர்களுக்கும் இடையில் செய்யப்பட்ட அசாம் உடன்பாட்டின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

அந்த உடன்படிக்கையின் படி பங்களா தேசம் உருவான திகதியான 1971 மார்ச் 24-ம் திகதியின் பின்னர் அசாமில் குடியேறியவர்கள் சட்ட விரோத வெளிநாட்டவர்களாகக் கருதப்பட்டனர். குடிவரவாளர் எந்த மதம் என அசாமியர்கள் பார்க்கவில்லை. பங்களா தேசத்தில் இருந்து வந்த இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் அவர்கள் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களாக அவர்கள் பார்க்கின்றார்கள். சீனா இந்தியா மீது படையெடுத்த போது இந்திய அதிகாரிகள் சீனர்கள் கைப்பற்றாமல் இருக்க பல அசாமிய அரச  ஆவணங்களை அழித்தனர்.

அதனால் அசாமியர்கள் தங்கள் மாநிலத்துக்கு என ஒரு குடிமக்கள் பதிவேட்டையும் உருவாக்கினர். 2019 டிசம்பரில் மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமைச் சட்டம் அசாமியர்கள் ராஜீவ் காந்தியுடன் செய்த உடன்பாட்டிற்கு முரணாக உள்ளது. மோடி அரசின் சட்டத்தின்படி 1971இன் பின்னர் வந்தவர்கள் இந்தியக்குடிமக்களாகக் கருதப்படலாம். அதனால் மோடியின் குடியுரிமைச் சட்டத்தை அசாமியர்கள் எதிர்க்கின்றார்க்ள்.

இனத்துக்காக போராடும் வங்காளிகள்

வங்காளிகள் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலும் வங்களா தேசத்திலும் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் ஓர் இனமாகும். அரபு நாட்டு வர்த்தகர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் பலர் ஆறாம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.  அப்படி மாறியவர்கள் பலர் கிழக்கு வங்களாத்தில் உள்ளவர்களே. இந்திய பாக்கிஸ்த்தான் பிரிவின் போது இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட கிழங்கு வங்கம் பாக்கிஸ்த்தானுடன் இணைக்கப்பட்டது.

இந்தியாவின் மாநிலமான மேற்கு வங்காளத்தின் வாழும் வங்காளிகள் தம் இனத்தவர்கள் பாக்கிஸ்த்தானில் இருந்தோ பங்களா தேசத்தில் இருந்தோ வருவதை எதிர்க்கவில்லை. அவர்களது இன உணர்வு மத உணர்வைக் கருத்தில்கொள்வதில்லை. 1947 இல் நடந்த பாக்கிஸ்த்தான் பிரிவினையின் போதும் 1971இல் நடந்த வங்களாதேசப் பிரிவினையின் போதும் மேற்கு வங்கத்திற்கு வந்த வங்காளிகளை அவர்கள் எதிர்க்கவில்லை.

பின்னர் வேலைவாய்ப்புத் தேடி வருபவர்களையும் அவர்கள் எதிர்க்கவில்லை. வரும் வங்காளிகளை வரவேற்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பனர்ஜிக்கு அந்தக் குடிவரவாளர்கள் வாக்களிப்பதால் பாரதிய ஜனதாக் கட்சி அதை கடுமையா எதிர்க்கின்றது. மோடியின் புதிய குடியுரிமைச் சட்டம் தமது இனத்தவர்களான இஸ்லாமிய வங்காளிகளுக்கு பாதகமானது என்பதால் அதை அவர்கள் எதிர்க்கின்றார்கள்

பங்களாதேசத்தில் பதினாங்கு மில்லியன் இந்துக்கள் வசிக்கின்றார்கள். பாக்கிஸ்த்தானில் எட்டு மில்லியன் இந்துக்கள் வசிக்கின்றார்கள். இவர்கள் இந்தியாவிற்கு வந்தால் பெரும் சிக்கல்களை எப்படிச் சமாளிப்பது என குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் கேட்கின்றார்கள்.

இதுவரை பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைந்து பணியாற்றிப் பிரிந்த மதவாதக் கட்சியான சிவசேனாக் கட்சியின் தலைவர் உதவ் தக்கரே அரசியலுடன் மதத்தைக் கலப்பது தவறென்கின்றார். உத்தரக்காண்டின் மாநில சட்ட சபைத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி  தோல்வியடைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் ஒன்றரை விழுக்காடு மட்டுமே வளர்கின்றது என்கின்றார் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி. இந்திய மக்களின் வேலைப் பசியைத் தீர்ப்பதற்கு இந்தியப் பொருளாதாரம் குறைந்தது எட்டு விழுக்காடாவது வளர வேண்டும்.

மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமைச் சட்டம் வெறும் மதப் பிரச்சனை மட்டுமல்ல.

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here