மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் சட்டத்தின் ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

நாட்டில் இலக்குவைக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியையும், செழிப்பான தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கு சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவது அத்தியாவசியமானதாகும் என  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

எனவே மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படும் நாட்டை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நீதிமற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில்  இவ்வாறு தெரிவித்தார்.