அநுராதபுரம் – ருவான்வெலிசாய வளாகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பதினொரு பேர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று (26) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதன்படி, ஒவ்வொரு நபருக்கும் தலா பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தனிநபர் பிணை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி, அநுராதபுரத்தில் உள்ள ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகே ‘சத்தியாகிரகம்’ நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்டோரை இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் கடந்த 12ம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



