உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலான ஆகிய இருவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஹுங்கல்லவில் உள்ள தனியார் ஹோட்டலில் அறைகளை முன்பதிவு செய்து இருவரும் தங்கியிருந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரான சுரேஷ் சலே நேற்று (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட 300 பக்கங்களுக்கும் அதிகமான அறிக்கையில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அறை முன்பதிவுகள் தொடர்பான கடன் அட்டைத் தகவல் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளதாகவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சுரேஷ் சலே மீது தற்போதைய விசாரணையில் எந்தவித சித்திரவதையும் செய்யப்படவில்லை என்று ஐந்து பேர் கொண்ட நிபுணர் மருத்துவக் குழுவின் அறிக்கையும் வெளிப்படுத்தியுள்ளதாக நேற்று(25) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.



