வெளிநாட்டுப் பயங்கரவாதிகளைத் தடுத்தல் சட்டமூலம் நிறைவேற்றம்

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்  இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், இச்சட்டமூலம் வாக்கெடுப்பின்றி திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதேநேரம் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை  அமைச்சுக்கான செலவுத் தலைப்புக்கள் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது.

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாவது நாளான  நேற்று (23) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான செலவுத் தலைப்புக்கள் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.