பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் விசேட துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (23) நடைபெறவுள்ளது.
இந்த விசேட கூட்டம் இன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த சட்டமூலம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்களை உள்ளடக்குவது தொடர்பிலும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.



